திருப்பூர், கோவை வழியாக செல்லும் 6 வாராந்திர ரெயில்கள் ரத்து

3 weeks ago 8

திருப்பூர்,

தெலுங்கானா மாநிலம் மொட்டுமரி ரெயில் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் சேலம் கோட்டத்துக்கு உட்பட்ட கோவை, திருப்பூர், ஈரோடு வழியாக செல்லும் வாராந்திர ரெயில்கள் ரத்து செய்யப்படுகிறது. அதன்படி திருவனந்தபுரம்- கோர்பா வாரத்துக்கு இருமுறை இயக்கப்படும் ரெயில் நாளை (வியாழக்கிழமை), 30-ந் தேதி மற்றும் வருகிற 2-ந் தேதி, 6-ந் தேதிகளில் ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் கோர்பா-திருவனந்தபுரம் ரெயில் 28-ந் தேதி, வருகிற 1-ந் தேதி, 4-ந் தேதி, 8-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.

கோரக்பூர்-திருவனந்தபுரம் இடையே வாரத்துக்கு 3 முறை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் நாளை (வியாழக்கிழமை), வருகிற 3-ந் தேதி, 5-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. திருவனந்தபுரம்-கோரக்பூர் ரெயில் வருகிற 31-ந் தேதி, 7-ந் தேதி, 8-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-இந்தூர் வாராந்திர ரெயில் வருகிற 28-ந் தேதி, 4-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. அதுபோல் இந்தூர்-திருவனந்தபுரம் வாராந்திர ரெயில் வருகிற 30-ந் தேதி, 6-ந் தேதி ரத்து செய்யப்படுகிறது. இந்த தகவலை சேலம் ரெயில்வே கோட்ட அதிகாரி 

Read Entire Article