திருப்பூரில் கணவர் கண் முன் கொடூரம் பெண்ணை கத்திமுனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம்: சிறுவன் உட்பட 3 பேர் கைது

2 months ago 8

திருப்பூர்: ஒடிசா மாநிலத்தில் இருந்து பனியன் நிறுவனத்தில் வேலை தேடி திருப்பூருக்கு நேற்று முன்தினம் (17ம் தேதி) இரவு ரயிலில் கணவன் (29), மனைவி (27), 3 வயது பெண் குழந்தையுடன் வந்துள்ளனர். ரயில் நிலையத்தை விட்டு வெளியேறிய 3 பேரும் இரவு எங்கு செல்வது என தெரியாமல் புஷ்பா பஸ் ஸ்டாப் அருகே நின்றிருந்தனர். அப்போது அங்கு வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த முகமது நதிம் (23), முகமது டேனிஸ்(25) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் பனியன் நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சுமி நகருக்கு அழைத்து சென்றனர்.

இரவு தங்கள் அறையில் தங்கும்படி கூறி உள்ளனர். இதைத்தொடர்ந்து, 6 பேரும் இரவு உணவு சாப்பிட்டுவிட்டு அறையில் தூங்கி உள்ளனர். நள்ளிரவு 12 மணியளவில் 3 பேரும் திடீரென கத்தியை காட்டி மிரட்டி ஒடிசா பெண்ணிடம் கணவர் முன்னிலையில் கூட்டு பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளனர். இதை வெளியே கூறினால் கொன்று விடுவதாக மிரட்டி உள்ளனர். இதையடுத்து அங்கிருந்து வெளியேறிய அவர்கள், திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் நேற்று புகார் அளித்தனர். போலீசார் விசாரணை நடத்தி, முகமது நதிம், முகமது டேனிஸ் மற்றும் 17 வயது சிறுவனை கைது செய்தனர்.

The post திருப்பூரில் கணவர் கண் முன் கொடூரம் பெண்ணை கத்திமுனையில் மிரட்டி கூட்டு பலாத்காரம்: சிறுவன் உட்பட 3 பேர் கைது appeared first on Dinakaran.

Read Entire Article