திருப்பூர், ஜன.26: திருப்பூர் காதர் பேட்டை அருகே உள்ள ஜெய்வாபாய் நகரவை பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மத்திய சுற்றுச்சூழல் விழிப்புணர்வு தகவல் வண்டி பிரச்சாரம் நேற்று நடைபெற்றது. மத்திய அரசு சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத்துறை உதவியுடன் தமிழ்நாடு அரசு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையும், பெரியகுளம் சுற்றுச்சூழல் கல்வி அறக்கட்டளை மற்றும் தேசியப்படை இணைந்து விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டனர்.
9 நபர்களைக் கொண்ட கலைக்குழுவினர் அரசு பள்ளிகளில் மாணவ மாணவிகளிடம் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் வாயிலாக புதுப்பிக்கத்தக்க ஆற்றல் , திடக்கழிவு மேலாண்மை, நீர் பாதுகாப்பு, ஒரு முறை மட்டும் பயன்படுத்தும் பிளாஸ்டிக் பை மற்றும் பொருட்களை தவிர்த்தல்,காலநிலை மாற்றம்,பல்லுயிர் பெருக்கம்,மண்வளம் மற்றும் இயற்கை வளம் காத்தல் போன்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.மேலும் மாணவ மாணவியர்களுக்கு சுற்றுச்சூழல் கருத்துக்கள் அடங்கிய துண்டு பிரசுரம் மற்றும் துணி பைகளை வழங்கினர்.
The post திருப்பூரில் அரசு பள்ளிகளில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பிரச்சாரம் appeared first on Dinakaran.