திருப்பூரில் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ள பள்ளி கட்டுமானங்களை இடிக்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவு

1 week ago 1

சென்னை,

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தைச் சேர்ந்தவர் வக்கீல் எல்.முருகானந்தம். இவர். சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில், ''சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்படி பள்ளிக்கூட கட்டிடங்கள் தரைத்தளம் மற்றும் 2 மேல் தளம் கொண்டதாக இருக்கவேண்டும். ஆனால், தாராபுரம், கண்ணன் நகரில் உள்ள தேன்மலர் மேல்நிலைப்பள்ளியில் 2011-ம் ஆண்டு தரைத்தளம் மற்றும் 2 மேல்தளத்துக்கு திட்ட அனுமதி பெற்றுவிட்டு சட்டவிரோதமாக 3-வது தளத்தை கட்டப்பட்டுள்ளன. இந்த சட்டவிரோதமாக தளத்தை இடிக்க வேண்டும் என்று அரசுக்கு மனு அனுப்பினேன். ஆனால், பள்ளிக்கூட உரிமையாளர் தண்டபாணி, கார்த்திகேயன் ஆகியோர் கட்டிட வரையறை செய்யக்கோரி அரசிடம் மேல்முறையீடு செய்துள்ளேன்.இந்த மேல்முறையீட்டு மனுவை விரைவாக பரிசீலிக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று இந்த ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இதன்படி, இவரது மனுவை பரிசீலிக்கும்படி 2015-ம் ஆண்டு ஐகோர்ட்டு டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.

அரசும் அந்த மேல்முறையீட்டு மனுவை பரிசீலித்து 2015-ம் ஆண்டு உத்தரவிட்டது. அதன்பின்னர், இதுவரை அரசு அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை'' என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் எல்.முருகானந்தம் ஆஜராகி வாதிட்டார்.

நகரமைப்பு துறை உதவி இயக்குனர் தாக்கல் செய்த பதில் மனுவில், பள்ளிக்கூடத்தில் சட்டவிரோத கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதை கண்டு பிடித்துள்ளோம்'' என்று கூறியிருந்தார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வக்கீல், பள்ளிக்கூடத்தில் ஏராளமான மாணவர்கள் படிப்பதால், இந்த கல்வியாண்டு முடியும் வரை பள்ளி நிர்வாகத்துக்கு வாய்ப்பு வழங்கவேண்டும் என்று கூறினார்.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், பள்ளியில் அனுமதியின்றி சட்டவிரோதமாக கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்று உதவி இயக்குனர் கூறும் குற்றச்சாட்டை உண்மையல்ல என்று பள்ளியின் உரிமையாளர்கள் தண்டபாணி, கார்த்திகேயனால் முடியவில்லை. எனவே, சட்டவிரோத கட்டிட பகுதியை மே மாதம் கோடை விடுமுறையில் அதிகாரிகள் இடித்து அகற்ற வேண்டும். கட்டிட திட்ட அனுமதியின்படி அந்த கட்டிடத்தை பள்ளி நிர்வாகம் புதுபித்துக்கொள்ளலாம் என்று உத்தரவிட்டுள்ளனர்.

Read Entire Article