திருப்பூரில் நிதி நிறுவன அதிபர் உள்பட 4 பேரை கத்தியால் வெட்டிய வழக்கில் அ.தி.மு.கவைச் சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ குணசேகரன் மீது போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.
நிதி நிறுவனம் நடத்தி வரும் பிரகாஷை ரமேஷ் என்பவர் கத்தியால் குத்தியதோடு தடுக்க வந்த மேலும் 3 பேரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.
பிரகாஷ்க்கும் குணசேகரனுக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் முன்விரோதம் உள்ளதாகவும் அதில், குணசேகரனுக்கு ஆதரவாக பிரகாஷை ரமேஷ் கத்தியால் குத்தியதாக போலீஸார் தெரிவித்தனர்.