திருப்பூரில் 131 மிமீ மழைப்பொழிவு

3 months ago 20

 

திருப்பூர், அக்.8: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நேற்று காலை வரையிலான நிலவரப்படி திருப்பூர் மாவட்டத்தின் புறநகர பகுதிகளான பல்லடம் தாராபுரம் உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மழை பெய்தது.

இதில் பல்லடத்தில் 13 மிமீ மழையும், மூலனூரில் 1 மிமீ, தாராபுரம் தாலுகா அலுவலக பகுதியில் 13 மிமீ, குண்டடத்தில் 32 மிமீ, உப்பாறு பகுதியில் 8 மிமீ, எநல்லதங்காள் ஓடை பகுதியில் 40 மிமீ, உடுமலைப்பேட்டையில் 10 மிமீ, திருமூர்த்தி அணைப்பகுதியில் 5 மிமீ, மடத்துக்குளத்தில் 3 மிமீ என மாவட்டம் முழுவதும் 131 மிமீ என சராசரியாக 6.5 மிமீ மழை பதிவாகியுள்ளது.

The post திருப்பூரில் 131 மிமீ மழைப்பொழிவு appeared first on Dinakaran.

Read Entire Article