
சிவகங்கை மாவட்டம் மடப்புரத்தில் உள்ள கோவிலில் காவலாளியாக பணியாற்றி வந்த இளைஞர் அஜித்குமார் (வயது 27). இவர் மீது பெண் நிகிதா என்ற பெண் நகை திருட்டு புகார் அளித்தார்.
புகார் தொடர்பாக அஜித்குமாரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது போலீசார் தாக்கியதில் அஜித்குமார் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 5 போலீசார் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், போலீசார் தாக்கியதில் உயிரிழந்த திருப்புவனம் அஜித்குமாரின் வீட்டிற்கு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று நேரில் சென்றார். அவர் அஜித்குமாரின் புகைப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அஜித்குமாரின் குடும்பத்தினருக்கு நயினார் நாகேந்திரன் ஆறுதல் கூறினார்.