மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்ல முயன்ற பாஜக நிர்வாகி வேலூர் இப்ராஹிமை போலீஸார் நேற்று கைது செய்தனர். அவரை விடுவிக்கக் கோரியும், போலீஸாரைக் கண்டித்தும் பாஜகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள பள்ளிவாசலில் வழிபாடு செய்வதற்காக, பாஜக சிறுபான்மையினர் அணி தேசியச் செயலாளர் வேலூர் இப்ராஹிம் நேற்று மதுரை வந்தார். ஜெய்ஹிந்த்புரத்தில் தனியார் விடுதியில் தங்கியிருந்த அவரை, மலைக்குச் செல்லக்கூடாது என்று போலீஸார் தடை விதித்தனர். இதனால், போலீஸாருக்கும், பாஜகவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.