சென்னை: திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் பேரணி நடத்துவது பிரச்சனையை உருவாக்கும் என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. திருப்பரங்குன்றம் மலை பிரச்சனைக்காக சென்னையில் யாத்திரை நடத்துவது ஏன் என்றும் ஐகோர்ட் கேள்வி எழுப்பியது. சென்னை ஏகாம்பரேஸ்வர் கோயில் முதல் கந்தக்கோட்டம் வரை வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி வழக்கு தொடரப்பட்டது. மனுவில் கோரியபடி ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கினால் அது தேவையற்ற விரும்பதகாத பிரச்சனைகளை உருவாக்கும் என ஐகோர்ட் தெரிவித்தது.
The post திருப்பரங்குன்றம் மலை தொடர்பாக சென்னையில் பேரணி நடத்துவது பிரச்சனையை உருவாக்கும்: சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் appeared first on Dinakaran.