திருப்பத்தூர்: திருப்பத்தூரில் விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினத்தையொட்டி அவர்களது சிலைகளுக்கு அமைச்சர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மருது சகோதர்கள் மணிமண்டபத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் மருது சகோதரர்கள் நினைவு தினம் அரசு சார்பில் இன்று அனுசரிக்கப்பட்டது. இன்று காலை மருது சகோதரர்களின் வாரிசுதாரர்கள் பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.