திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் சாமி தரிசனம்

2 months ago 14

திருப்பதி,

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் 'அட்டகத்தி' படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். அதைத்தொடர்ந்து, 'காக்கா முட்டை, தர்மதுரை, ரம்மி, கனா, சாமி 2, வடசென்னை' உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார்.

தற்போது இவர், நடிகர் டொவினோ தாமஸ், நடிகை கீர்த்தி ஷெட்டி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான ஏ.ஆர்.எம் படத்தில் நடித்துள்ளார். இப்படம் கடந்த 12-ம் தேதி ஓணம் பண்டிகையை முன்னிட்டு வெளியானது. மேலும், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாருக்கு ஜோடியாக 'உத்தரகாண்டா' படத்திலும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்துவருகிறார். இந்த படம் மூலம் ஐஸ்வர்யா ராஜேஷ் கன்னட திரையுலகில் அறிமுகமாகியுள்ளார்.

இந்த நிலையில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தரிசனம் செய்திருக்கிறார். சாமி தரிசனத்துக்குப் பிறகு, கோவில் நிர்வாகிகள் அவருக்கு பிரசாதம் வழங்கினர்.கோவிலுக்கு வெளியே இருந்த பக்தர்கள் ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் புகைப்படம் எடுத்து கொண்டனர்.

திருப்பதியில் நடிகை ஐஸ்வர்யாராஜேஷ் சாமி தரிசனம் #Tirupati #aishwaryarajesh #Temple #Actress #Heroine pic.twitter.com/BWg7vBZTA2

— Thanthi TV (@ThanthiTV) October 26, 2024
Read Entire Article