மும்பை,
மறைந்த பிரபல பாலிவுட் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வி கபூர். இவர் இந்தி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் 'தேவரா' படம் மூலம் தெலுங்கில் அறிமுகமாகி இருக்கிறார். இதை அடுத்து தமிழ் படத்தில் நடிக்க கதை கேட்டு வருகிறார்.
இந்நிலையில் ஜான்வி கபூர், திருமணம் குறித்து மனம் திறந்து பேசி இருக்கிறார். பாலிவுட் இயக்குனரும் தயாரிப்பாளருமான கரண் ஜோஹரின் நிகழ்ச்சி ஒன்றில் ஜான்வி கபூர் பங்கேற்றார்.
அப்போது திருப்பதியில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று கூறினார். மேலும், கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருமலையில் வாழ்க்கையை கழிக்க விரும்புவதாகவும் தெரிவித்தார்.