த.வெ.க. மாவட்ட செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் - விஜய் பங்கேற்க உள்ளதாக தகவல்

3 hours ago 1

சென்னை,

தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம், சென்னை பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த் தலைமையில் இன்று நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்று, கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. த.வெ.க. கட்சிக்கு மாவட்ட அளவிலான நிர்வாகிகள் தேர்வு தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இன்று குறிப்பிட்ட சில மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகளை தேர்வு செய்ய கட்சியின் தலைவர் விஜய் தலைமையில் நேர்காணல் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Read Entire Article