திருப்பதியில் 6 பக்தர்கள் பலி குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பு

5 months ago 15

திருமலை: திருப்பதி கூட்ட நெரிசலில் 6 பக்தர்கள் பலியான சம்பவத்தில் ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வைகுண்ட ஏகாதசிக்கான சாமி தரிசனம் செய்ய இலவச டோக்கன்கள் பெற வந்து கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த ஆந்திரப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி எம்.சத்யநாராயண மூர்த்தி தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து ஆந்திரா அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. பொறுப்பேற்ற நாளிலிருந்து 6 மாதங்களுக்குள் மாநில அரசுக்கு அறிக்கையை ஆணையம் சமர்ப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post திருப்பதியில் 6 பக்தர்கள் பலி குறித்து விசாரிக்க ஆணையம் அமைப்பு appeared first on Dinakaran.

Read Entire Article