திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!!

3 months ago 20

சென்னை: திருப்பதி லட்டு விவகாரத்தில் ஒன்றிய பாஜக அரசு அரசியல் செய்வதாக ஆந்திர முன்னாள் அமைச்சர் ரோஜா குற்றம் சாட்டியுள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் முந்தைய ஜெகன் மோகன் ஆட்சியில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டதாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு பகிரங்கமான குற்றச்சாட்டை முன்வைத்தார். ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நெய்யில் விலங்கின் கொழுப்பு கலக்கப்பட்டது உறுதியான நிலையில், இந்த விவகாரம் பெரும் புயலை கிளப்பியது. ஆனால் தொடக்கம் முதலே தங்கள் மீதான குற்றச்சாட்டை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் மறுத்து வருகிறது.

இந்த நிலையில், திருப்பதி லட்டு சர்ச்சை குறித்து ஆந்திர முன்னாள் அமைச்சரும், நடிகையுமான ரோஜா பேட்டியளித்தார். அதில், லட்டு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்வதாக சாடியுள்ள ரோஜா, பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் இதுவரை சந்திரபாபு நாயுடுவை கண்டிக்காதது என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். லட்டு தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் தீர்ப்பு வந்ததும் சந்திரபாபு நாயுடு மிகப்பெரிய பின்னடைவை சந்திப்பார் என்றும் நடிகை ரோஜா தெரிவித்துள்ளார்.

The post திருப்பதி லட்டு விவகாரம்.. சந்திரபாபு நாயுடுவை, மோடி, அமித்ஷா கண்டிக்காதது ஏன்?: முன்னாள் அமைச்சர் ரோஜா கேள்வி!! appeared first on Dinakaran.

Read Entire Article