கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏமாற்றம் தேவையில்லை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில்

3 hours ago 1

டெல்லி :கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏற்கனவே அளிக்கப்பட்ட அறிக்கையில் மாற்றம் தேவையில்லை என்று தொல்லியல் துறை இயக்குநருக்கு தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் அளித்துள்ளார். மேலும் அமர்நாத் ராமகிருஷ்ணன் அளித்த பதிலில் , “அடுக்குகள் வாரியாகவும், கால வரிசைப்படியும் அனைத்து ஆவணங்களும் இணைக்கப்பட்டுள்ளன. அகழாய்வு தொடர்பான வரைபடங்கள், தட்டுகள், படங்கள் அனைத்தும் உயர் தெளிவுத்திறனுடன் வழங்கப்பட்டுள்ளன. இரண்டரை ஆண்டுகளுக்குப் பின் கேள்வி எழுப்பப்படுகிறது. தொன்மை அறிவியல் முறைப்படி ஆய்வு செய்து கி.மு.800-கி.மு.500 என உறுதி செய்தே அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது.”இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post கீழடி ஆய்வறிக்கை சரியாகவே இருக்கிறது. ஏமாற்றம் தேவையில்லை: தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் பதில் appeared first on Dinakaran.

Read Entire Article