திருப்பதி பிரம்மோற்சவ விழா: சர்வபூபால வாகனத்தில் மலையப்பசாமி வீதிஉலா

1 month ago 10

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வெகுவிமரிசையாக நடந்து வருகிறது. விழாவின் 3-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை சிம்ம வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி 'யோக நரசிம்மர்' அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

அதன்பிறகு இரவு 7 மணியில் இருந்து 9 மணிவரை முத்துப்பந்தல் வாகன வீதிஉலா நடந்தது. அதில் உற்சவர் மலையப்பசாமி பாகாசூர வத அலங்காரத்தில் தனது உபய நாச்சியார்களுடன் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்த நிலையில், பிரம்மோற்சவ விழாவின் 4-வது நாளான இன்று காலை 8 மணியில் இருந்து 10 மணிவரை கல்ப விருட்ச வாகனத்தில் மலையப்ப சாமி வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து இரவில் மலையப்பசுவாமி சர்வபூபால வாகனத்தில் காளிய மர்த்தன வேடத்தில் ஸ்ரீதேவி, பூதேவியுடன் காட்சி தந்தார்.

வாகன வீதிஉலாவின்போது, பக்தர்கள் திரளானோர் பஜனை பாடல்களை பாடினர். ஆண், பெண் கலைஞர்கள் நாட்டிய, நடன, இசை போன்ற கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். ஜீயர் சுவாமிகள் கோஷ்டி கானம் நடத்தினர்.வாகனசேவை கோலாகலமாக நடந்தது.

 

 

Read Entire Article