திருப்பதி-பழநி இடையே தினசரி பஸ், ரயில் சேவை: ஆந்திர துணை முதல்வர் தகவல்

3 months ago 11

பழநி: ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று முன்தினம் கும்பகோணத்தில் உள்ள கோயில்கள் மற்றும் திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். நேற்று பழநி தண்டாயுதபாணி சுவாமி மலைக்கோயிலில், மகன் அகிரா நந்தனுடன் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக பவன் கல்யாண் நிருபர்களிடம் கூறியதாவது: பழநியில் இருந்து திருப்பதிக்கு நாள்தோறும் இயக்கப்பட்டு வந்த பஸ் போக்குவரத்து கொரோனா காலகட்டத்தில் இருந்து நிறுத்தப்பட்டது தற்போதுதான் தெரியும்.

ஆந்திர போக்குவரத்து அதிகாரிகளுடன் பேசி மீண்டும் பழநி-திருப்பதி தினசரி பஸ் சேவை துவக்க நடவடிக்கை எடுக்கப்படும். அதுபோல் மத்திய அரசிடம் பழநி- திருப்பதி ரயில் இயக்கவும் வலியுறுத்தப்படும். திருப்பதி தரிசனம் தொடர்புடைய சேவைகளுக்கான டிக்கெட்டுகளை பதிவு செய்யும் வகையில் பழநியிலேயே தகவல் மையம் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும். திருப்பதி லட்டுக்கு கலப்பட நெய் வழங்கிய விவகாரத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க வேண்டும். இவ்வாறு கூறினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் முருகன் கோயலிலும் சாமி தரிசனம் செய்தார்.

The post திருப்பதி-பழநி இடையே தினசரி பஸ், ரயில் சேவை: ஆந்திர துணை முதல்வர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article