திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர வசந்தோற்சவம் நிறைவு

1 week ago 2

திருமலை,

திருப்பதி ஏழுமலையான் கோவில் பின்பக்கம் உள்ள வசந்தோற்சவ மண்டபத்தில் கடந்த 3 நாட்களாக வருடாந்திர வசந்தோற்சவம் வெகுவிமரிசையாக நடந்து வந்தது. நேற்று உற்சவத்தின் நிறைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. முதல் நாள், 2-வது நாள் வசந்தோற்சவத்தில் உற்சவர் மலையப்பசாமி தனது உபயநாச்சியார்களுடன் வசந்தோற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு உற்சவர்களுக்கு வசந்தோற்சவம் நடத்தப்பட்டது.

நிறைவு நாளான நேற்று உற்சவர்களான ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி, சீதா, ராமர், லட்சுமணர் மற்றும் ஆஞ்சநேயர், ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர் வசந்தோற்சவ மண்டபத்தில் எழுந்தருளினார்கள்.

அதைத்தொடர்ந்து மதியம் 2 மணியில் இருந்து மாலை 4 மணி வரை உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது. உற்சவர்கள் ஒரே மேடையில் தரிசனம் செய்த பக்தர்கள் பக்தி பரவசமடைந்தனர்.

வசந்தோற்சவம் நிறைவையொட்டி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று நடத்தப்படும் கருடசேவையை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. 

Read Entire Article