
திருப்பதி,
10 அணிகள் இடையிலான 18வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை 48 லீக் ஆட்டங்கள் நடந்து முடிந்துள்ளன. இந்த லீக் ஆட்டங்களின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பெங்களூரு, மும்பை, குஜராத், டெல்லி அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.
5 முதல் 10 இடங்கள் வரை பஞ்சாப் கிங்ஸ், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் உள்ளன. நடப்பு தொடரில் ஆர்.சி.பி அணி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. இதுவரை 10 ஆட்டங்களில் ஆடி 7 வெற்றி, 3 தோல்வி கண்டுள்ளது.
கடந்த சீசன்களில் மோசமாக செயல்பட்ட ஆர்.சி.பி அணி நடப்பு சீசனில் ரஜத் படிதார் தலைமையில் களம் கண்டு விளையாடி வருகிறது. நடப்பு தொடரில் ஆர்.சி.பி. பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவது உறுதியாகிவிட்டது. இதனால் ஆர்.சி.பி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஆர்.சி.பி. வீரர்களான ரஜத் படிதார், ஜித்தேஷ் சர்மா மற்றும் வீராங்கனை ஸ்ரேயங்கா பட்டீல் ஆகியோர் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் இன்று சாமி தரிசனம் செய்தனர். இது தொடர்பான சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.