திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.67 கோடி உண்டியல் காணிக்கை

11 hours ago 3

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்கின்றனர். வாரவிடுமுறை, பண்டிகை நாட்களில் கூடுதல் எண்ணிக்கையில் பக்தர்கள் தரிசிக்கின்றனர். இந்நிலையில், நேற்று 84,536 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 25,890 பக்தர்கள் தலைமுடியை காணிக்கையாக செலுத்தினர்.

உண்டியலில் செலுத்திய காணிக்கை நேற்றிரவு எண்ணப்பட்டது. அதில், ரூ.3.67 கோடி காணிக்கை கிடைத்தது. இன்று காலை வைகுண்டம் காத்திருப்பு அறையில் உள்ள 27 அறைகளில் பக்தர்கள் காத்திருந்தனர். இவர்களில் நேர ஒதுக்கீடு இன்றி வரும் சர்வ தரிசன பக்தர்கள் சுமார் 15 மணி நேரமும், ரூ.300 டிக்கெட் பெற்ற பக்தர்கள் 2 மணி நேரத்திலும் சுவாமியை தரிசனம் செய்தனர்.

12ம் தேதி கருட சேவை;
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மாதந்தோறும் பவுர்ணமியன்று கருடசேவை நடத்தப்படுவது வழக்கம். அதன்படி தை மாத பவுர்ணமியொட்டி வரும் 12ம் தேதி (நாளை மறுதினம்) இரவு 7 மணிக்கு தங்க கருடவாகனத்தில் மலையப்ப சுவாமி மாடவீதியில் வலம் வர உள்ளார்.

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ரூ.3.67 கோடி உண்டியல் காணிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article