திருப்பதி அடுத்த ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு 4 டன் வண்ண மலர்களால் புஷ்பயாகம்

3 days ago 1

திருமலை : திருப்பதி அடுத்த ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் புஷ்பயாகம் நேற்று நடந்தது.

இதனையொட்டி கோயிலில் ஸ்ரீதேவி பூதேவி சமேத கல்யாண வெங்கடேஸ்வர சுவாமி உற்சவர்களுக்கு பால், தயிர், தேன், இளநீர், மஞ்சள், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் செய்யப்பட்டது.தொடர்ந்து ரோஜாக்கள், சாமந்தி, சம்பங்கி, மல்லிகை, கனகாம்பரம், தாமரை, மல்லி, முல்லை உள்ளிட்ட மலர்களும் துளசி, தவணம், வில்வம் மற்றும் பன்னீர் இலைகள் என 4 டன் வண்ண மலர்களை கொண்டு புஷ்ப யாகம் நடைபெற்றது.

இதற்காக ஆந்திரா, தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களிலிருந்து மலர்களை பக்தர்கள் நன்கொடையாக வழங்கினர்.

இதில் அறங்காவலர் குழு உறுப்பினர் சுசித்ரா எல்லா, கோயில் துணை செயல் அதிகாரி வரலட்சுமி, தோட்டக் கண்காணிப்பாளர் னிவாசலு, தோட்ட மேலாளர் ஜனார்தன் ரெட்டி, ஏ.இ.ஓ. கோபிநாத், கண்காணிப்பாளர்கள் ரமேஷ், ராஜ்குமார், கோயில் அர்ச்சகர் பாலாஜி ரங்காச்சாரியுலு, கோயில் ஆய்வாளர் தனசேகர் அதிகாரிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

The post திருப்பதி அடுத்த ஸ்ரீனிவாசமங்காபுரத்தில் கல்யாண வெங்கடேஸ்வர சுவாமிக்கு 4 டன் வண்ண மலர்களால் புஷ்பயாகம் appeared first on Dinakaran.

Read Entire Article