திருபுவனத்தில் இலவச பொது சுகாதாரம் முகாம்

4 months ago 14

 

திருவிடைமருதூர், பிப்.17: திருபுவனத்தில் இலவச பொது சுகாதாரம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடந்தது.தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, திருபுவனம் ஆதிசக்தி சித்தர் ஞானபீடத்தில், இந்திய பண்பாட்டு அமைப்பு அறக்கட்டளையின் ஆதிசக்தி சித்தர் ஞானபீடம், கும்பகோணம் காருண்யா சுகாலயா மருத்துவமனை, திருபுவனம் மகளிர் அமைப்பு ஆகியன இணைந்து நடத்திய இலவச பொது ஆரோக்கியம், மருத்துவம் மற்றும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

மகளிர் அமைப்பு தலைவி சங்கீதா வரவேற்றார். பொறியாளர் ஹரிபிரகாஷ் தலைமையேற்று முகாமை தொடங்கி வைத்தார்.இந்த முகாமில் மருத்துவர்கள் சிவக்குமார், லட்சுமி, சுரேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு நோயாளிகளுக்கு மருத்துவ பரிசோதனைகளை செய்தனர். இந்த முகாமில் ஆசீவக தமிழ் சித்தர் அருள்திரு கண்ணன் அடிகளார், இந்தியன் மழலையர் தொடக்கப்பள்ளி புவனேஸ்வரி, திருவிடைமருதூர் ரெட் கிராஸ் பாஸ்கரன், சுப்பிரமணியன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணமூர்த்தி நன்றி கூறினார். முகாமில் 200 பேர் கலந்து கொண்டனர்.

The post திருபுவனத்தில் இலவச பொது சுகாதாரம் முகாம் appeared first on Dinakaran.

Read Entire Article