திருநெல்வேலியில் மண் திருட்டு: 3 பேர் கைது, ஜேசிபி வாகனம் பறிமுதல்

4 hours ago 1

திருநெல்வேலி தாலுகா காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன் தலைமையிலான காவல்துறையினர் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பாட்டத்தைச் சேர்ந்த சந்திரன் (வயது 35), பேச்சிமுத்து(73) மற்றும் சீவலப்பேரியை சேர்ந்த ஆறுமுகக்கனி(27) ஆகிய 3 பேரும் சேர்ந்து கீழப்பாட்டம் பகுதியில் ஜேசிபி மூலம் மண்ணை எந்த ஒரு அனுமதியும் இன்றி சட்ட விரோதமாக அள்ளி குவித்து வைத்துக் கொண்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து மேற்சொன்ன சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் 3 பேரையும் தாலுகா காவல் நிலையம் அழைத்து சென்றார். இதுகுறித்து தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் சசிகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு சந்திரன், பேச்சிமுத்து, ஆறுமுகக்கனி ஆகிய 3 பேரையும் நேற்று (24.5.2025) கைது செய்தார். மேலும் அவர்களிடமிருந்து மண்ணையும், ஜேசிபி வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த நடவடிக்கை எடுத்தார். 

Read Entire Article