திருநெடுங்களநாதர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

2 weeks ago 2

திருவெறும்பூர், ஜன.22: திருவெறும்பூர் அருகே உள்ள திருநெடுங்களநாதர் கோயிலில் தை மாத தேய்பிறை அஷ்டமி முன்னிட்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. திருவெறும்பூர் அருகே திருநெடுங்குளத்தில் உள்ள திருநெடுங்கலநாதர் கோயில் உள்ளது. இது திருஞானசம்பந்தரால் பாடல் பெற்ற ஸ்தலமாகும். இந்த கோயிலில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. பால், சந்தனம், தேன், மஞ்சள், திரவியபொடி, விபூதி, பஞ்சாமிர்தம், அரிசி மாவு, தயிர், இளநீர், பழ வகைகள் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக பொருட்களை கொண்டு காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து கலசத்திற்கு பூஜை செய்து அதன் புனித நீரை கொண்டு மூல மந்திரம் ஜெபிக்கப்பட்டு, ருத்ர ஜமக வேத மந்திர பாராயணமும், தேவார திருவாசக திருமுறை பாராயணத்துடன் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து வண்ண மலர்கள், பட்டு வஸ்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட கால பைரவருக்கு மகா தீபாரணை நடைபெற்றது.

இதில் பக்தர்கள் தேவாரம் திருவாசகம் பாடல்களை பாடி காலபைரவரை வழிபட்டனர். தா.பேட்டை: தா.பேட்டையில் காசி விசாலாட்சி உடனமர் காசி விஸ்வநாதர் சிவாலயத்தில் பஞ்சமுக பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், வழிபாடுகள் நடந்தது. அப்போது பஞ்சமுக பைரவருக்கு பால், சந்தனம், தயிர், தேன், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் உள்ளிட்ட பல்வேறு வகையான அபிஷேகங்கள் நடந்தது. தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு சிறப்பு அலங்காரத்தில் பஞ்சமுக பைரவர் பக்தர்களுக்கு அருளினார். அப்போது பக்தர்கள் திரளாக கலந்துகொண்டு விளக்கேற்றி திருமண தடை நீங்கவும், குழந்தை பாக்கியம் வேண்டியும், மாணவ, மாணவிகள் கல்வியில் சிறந்து விளங்கவும் வழிபட்டனர்.

The post திருநெடுங்களநாதர் கோயிலில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் appeared first on Dinakaran.

Read Entire Article