திருநீர்மலை பகுதியில் ரூ.2.97 கோடியில் திட்ட பணி: எம்எல்ஏ, மேயர் தொடங்கி வைத்தனர்

4 months ago 16

தாம்பரம்: தாம்பரம் மாநகராட்சி, 1வது மண்டலம், திருநீர்மலை, 31வது வார்டு பகுதியில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ரூ.1.71 கோடியில் வணிக வளாகம், கிழக்கு மாட வீதி பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ரூ.1.25 கோடியில் புதிய கட்டிடம், 29வது வார்டு, சந்திரன் நகர் பகுதியில் ரூ.23.50 லட்சத்தில் பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டு அதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. இதில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலக்கண்ணன், துணை மேயர் கோ.காமராஜ் ஆகியோர் கலந்து கொண்டு வணிக வளாகம், பள்ளிகட்டிடம், பூங்கா பணிகளுக்கு அடிக்கல் நாட்டினர்.

The post திருநீர்மலை பகுதியில் ரூ.2.97 கோடியில் திட்ட பணி: எம்எல்ஏ, மேயர் தொடங்கி வைத்தனர் appeared first on Dinakaran.

Read Entire Article