காரைக்கால், ஜன.11: காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் அமைந்துள்ள புகழ் பெற்ற நளநாராயண பெருமாள் கோயிலில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நேற்று அதிகாலை நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு பெருமாள் திருப்பள்ளியெழுச்சியும், தொடர்ந்து நளநாராயணப் பெருமாள் தேவி, பூதேவி சமேதராக தங்க கவச அலங்காரத்தில் சொர்க்க வாசல் வழியே எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து நளநாராயணப் பெருமாள் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவில் தருமபுர ஆதீன கட்டளை விசாரணை மத் சட்டநாத தம்பிரான் சுவாமிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
The post திருநள்ளாறில் புகழ் பெற்ற நளநாராயண பெருமாள் கோயிலில் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.