திருத்துறைப்பூண்டி, ஏப். 25: திருத்துறைப்பூண்டி பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டை சீர செய்ய, நுகர்வோர் பாதுகாப்பு மைய சார்பில் கலெக்டருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருத்துறைப்பூண்டியில் கோடைகாலத்தில் மின்சார வாரியம் எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் இரவு நேரத்திலும் கூட எட்டு மணி நேரம் மின்வெட்டை அமல்படுத்துகிறது. கடந்த சில நாட்களாக நான்கு முறை இரவு நேரத்தில் நீண்ட நேரம் மின் இணைப்பு மின்வாரியத்தால் துண்டிக்கப்பட்டு பொதுமக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
இது சம்பந்தமாக வர்த்தகர்கள் மற்றும் நுகர்வோர் பெருமக்களிடமிருந்து புகார்கள் வரப்பட்டு மின்சாரத்துறைக்கு அனுப்பப்பட்டும் நடவடிக்கை இல்லை. ஆதிருவாரூர் மாவட்ட ஆட்சியர் உடனடியாக செயல்பட்டு திருத்துறைப் பூண்டி மின்சார வாரியத்திற்கு அறிவிக்காமல் மின்சாரத்தை துண்டிக்க கூடாது என அறிவுறுத்த வேண்டுமென்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மையம்சார்பாக கேட்டுக் கொள்ளப்படுகிறது.
The post திருத்துறைப்பூண்டியில் மின்வெட்டை சீர் செய்ய கோரிக்கை appeared first on Dinakaran.