திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் மழைபாதிப்புகளை அமைச்சர் டிஆர்பி ராஜா பார்வையிட்டார்

2 hours ago 2

திருவாரூர், நவ. 28: திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் மழை பாதித்த நெல் வயல்கள் உள்ளிட்ட பகுதிகளை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா ஆய்வு செய்தார். திருவாரூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று திருத்துறைப்பூண்டி மற்றும் முததுப்பேட்டை பகுதிகளில் ஆய்வு செய்தார். அதன்படி, திருத்துறைப்பூண்டி நகராட்சிக்குட்பட்ட சாய்ராம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் அபிஷேக கட்டளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அரசு மேல்நிலைப்பள்ளி முகாம்களில் தங்கியுள்ள பொதுமக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார்.

மேலும், அங்கு உள்ள வசதிகள் மற்றும் உணவு வழங்கப்படுவது குறித்தும் ஆய்வு செய்தார். பின்னர், ஆரியலூர் பகுதியில் நெல் வயல்களில் நீர் தேங்கி, பயிர்கள் மூழ்கி நிற்பதை பார்வையிட்டு பாதிப்புகள் குறித்து விவசாயிகளுடன் கேட்டறிந்தார். தொடர்ந்து, கீழப்பெருமழை ஊராட்சியில் வாய்க்கால் நீரில் தேங்கிநிற்கும் வெங்காயத் தாமரைகளை ஜேசிபி மூலம் அகற்றும் பணிகளையும், விளாங்காடு பகுதிகளில் மழைநீர் சூழ்ந்துள்ளதை அகற்றும் பணியினையும், இராமநாதபுரம் பகுதியினையும் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பார்வையிட்டு ஆய்வு செய்துதடன் மழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுக்க வேண்டும் என அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது, கலெக்டர் சாரு, எம்.எல்.,ஏக்கள் பூண்டிகலைவாணன், மாரிமுத்து, மாவட்ட ஊராட்சித்தலைவர் தலையாமங்கலம் பாலு, மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் அமுதாமனோகரன், திருத்துறைப்பூண்டி தாசில்தார் குருமூர்த்தி, நகராட்சித் தலைவர் கவிதா பாண்டியன்,கமிஷனர் துர்கா, துணை தலைவர் ஜெயபிரகாஷ், நியமனகுழு உறுப்பினர் ஆர்.எஸ்.பாண்டியன், வட்டார வேளாண்மை குழு தலைவர் மனோகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் எம்.எஸ்.கார்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

The post திருத்துறைப்பூண்டி மற்றும் முத்துப்பேட்டை பகுதிகளில் மழைபாதிப்புகளை அமைச்சர் டிஆர்பி ராஜா பார்வையிட்டார் appeared first on Dinakaran.

Read Entire Article