திருத்துறைப்பூண்டி, ஏப். 28: திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி கிராமத்தில், புதிதாக திறக்கவுள்ள ரேஷன் கடைக்கு மின் இணைப்பு வழங்கவேண்டும் என நுகர்வோர் கண்காணிப்பு குழு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலகத்தில், நுகர்வோர் கண்காணிப்பு குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் உறுப்பினர்கள் அண்ணாதுரை, கலா, சரோஜினி, எரிவாயு ஏஜென்ட் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட நுகர்வோர் பாதுகாப்பு மைய மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். பூசலாங்குடி கிராமத்தில் 10 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ரேஷன் கடை கட்டடத்திற்கு உடனடியாக மின் இணைப்பு திருத்துறைப்பூண்டி மின்வாரியம் வழங்கி திறக்க வேண்டும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. திருத்துறைப்பூண்டி வட்ட வழங்கல் அலுவலர் கோரிக்கைகளை பரிசீலித்து 30 நாட்களில், உரிய துறைகள் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தானர்.
The post திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடியில் ரேஷன் கடைக்கு மின் இணைப்பு வழங்கி விரைவில் திறக்க வேண்டும் appeared first on Dinakaran.