திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி நாளை தொடக்கம்: 7ம் தேதி புஷ்பாஞ்சலி

2 weeks ago 6

திருத்தணி: திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா நாளை காலை லட்சார்ச்சனையுடன் தொடங்குகிறது. 7 நாட்கள் நடைபெற உள்ள விழாவில் முக்கிய நிகழ்ச்சியான முருகப்பெருமானுக்கு வரும் 7ம் தேதி மாலை வண்ண மலர்களால் புஷ்பாஞ்சலி நடைபெற உள்ளது. திருத்தணியில் சிறப்பு பெற்ற முருகன் கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதுண்டு. கார், பைக் மற்றும் நடந்து சென்றும் முருக பெருமானை தரிசிப்பது வழக்கம். முக்கிய விழாக்களில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.

அந்த வகையில் முக்கிய விழாக்களில் ஒன்றான கந்தசஷ்டி விழா நாளை தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலையில் கோயில் நடை திறக்கப்பட்டு மூலவருக்கு புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 8 மணிக்கு காவடி மண்டபத்தில் வள்ளி, தெய்வானை சமேத உற்சவர் முருகப்பெருமானுக்கு லட்சார்ச்ச்சனை பூஜைகள் நடக்கிறது. 7 நாட்களும் வில்வ இலைகளால் லட்சார்ச்சனை நடைபெற உள்ளது.

விழாவில் இறுதி நாளான வரும் 7ம் தேதி மாலை முருகப்பெருமானுக்கு புஷ்பாஞ்சலி நடைபெறும். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்வார்கள். பலர், காவடி ஏந்தியும், அலகு குத்தியும் நேர்த்தி கடன் செலுத்துவார்கள். இதையொட்டு முருகபக்தர்கள் மாலையணிந்து விரதம் தொடங்க உள்ளனர். ஏற்பாடுகளை கோயில் அறகாவலர் குழு தலைவர் ஸ்ரீதரன், இணை ஆணையர் ரமணி தலைமையில் அறங்காவலர்கள், கோயில் அலுவலர்கள் செய்து வருகின்றனர்.

The post திருத்தணி முருகன் கோயிலில் கந்தசஷ்டி நாளை தொடக்கம்: 7ம் தேதி புஷ்பாஞ்சலி appeared first on Dinakaran.

Read Entire Article