திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ₹1.58 கோடி வசூல்

2 months ago 11

திருத்தணி,நவ.26: திருத்தணி முருகன் கோயிலுக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்களிலிருந்தும் வருகை தந்து சாமி தரிசனம் செய்து தங்களின் நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் உண்டியல்களில் பணம், தங்கம், வெள்ளி பொருட்கள் காணிக்கையாக செலுத்துவது வழக்கம். இந்தநிலையில் கடந்த 35 நாட்களில் பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கை கோயில் இணை ஆணையர் ரமணி மேற்பார்வையில் நேற்று வசந்த மண்டபத்தில் எண்ணும் பணி தொடங்கியது. இதில் கோயில் பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். முடிவில் ரொக்கமாக 1 கோடியே 58 லட்சத்து 47ஆயிரத்து 551 ரூபாய், 776 கிராம் தங்கம் மற்றும் 9,870 கிராம் வெள்ளி ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

The post திருத்தணி முருகன் கோயிலில் உண்டியல் காணிக்கை ₹1.58 கோடி வசூல் appeared first on Dinakaran.

Read Entire Article