திருட்டு பைக்கில் வந்து செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர்

1 month ago 4

துரைப்பாக்கம்: சோழிங்கநல்லூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த தினேஷ்பாபு (26), கடந்த 20ம் தேதி ராஜிவ்காந்தி சாலை, குமரன் நகர் அருகே நடந்து சென்றபோது, பைக்கில் வந்த 2 மர்ம நபர்கள், இவரது விலை மதிப்புள்ள செல்போனை பறித்து சென்றனர். இதுகுறித்து செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார், சம்பவ இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, விசாரித்தனர். அதில், சோழிங்கநல்லூர், காந்தி நகரை சேர்ந்த அசோக் (25), அஜித்குமார் (24) ஆகியோர், திருமுல்லைவாயல் சென்று பைக் திருடி வந்து, செல்போன் பறித்தது தெரிந்தது. அவர்களை கைது செய்தனர்.

The post திருட்டு பைக்கில் வந்து செல்போன் பறித்த 2 பேர் சிக்கினர் appeared first on Dinakaran.

Read Entire Article