காரிமங்கலம், பிப்.16: காரிமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில், சட்ட விரோதமாக லாரிகளில் இருந்து டீசல் திருடப்பட்டு, லோக்கல் வாகனங்களுக்கு இரவு பகலாக விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த தகவலின் பேரில், தீவிர நடவடிக்கை எடுக்க மாவட்ட எஸ்பி மகேஸ்வரன் போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து காரிமங்கலம் போலீசார் பொன்னேரி காமராஜர் நகர், கீழுர் ஆகிய பகுதிகளில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சட்ட விரோதமாக டீசல் விற்பனை செய்த, அதே பகுதியை சேர்ந்த அர்ச்சுனன்(40), சங்கர்(42), பிரவீன்(22) ஆகிய 3பேரை கைது செய்து, அவர்கள் மறைத்து வைத்திருந்த டீசலை பறிமுதல் செய்தனர்.
The post திருட்டு டீசல் விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.