திருட வந்து கிணற்றுக்குள் விழுந்த திருடன்..! உதவி செய்த ஹவுஸ் ஓனர்..!

2 months ago 14
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே, விவசாயி ஒருவர் இரவில் வீட்டை பூட்டிவிட்டு முற்றத்தில் தூங்கியுள்ளார். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு அவர் எழுந்தபோது, வீட்டின் கதவை ஒரு திருடன் திறக்க முயன்றதைப் பார்த்துள்ளார். உடனே, திருடன்.. திருடன் என அவர் கூச்சலிட, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து அந்தத் திருடனை அங்கிருந்து விரட்டியுள்ளனர். இருட்டில் திருடன் ஓடி மறைந்து விட்ட நிலையில், அவன் தப்பிச் சென்றுவிட்டதாகக் கருதி அனைவரும் வீட்டுக்குத் திரும்பியுள்ளனர். இந்த நிலையில், காலையில் கண் விழித்து எழுந்த விவசாயி, வீட்டின் கிணற்றுக்குள் சத்தம் கேட்கவே, அங்கு சென்று எட்டிப் பார்த்துள்ளார். இரவு வீட்டுக்குத் திருட வந்து துரத்தப்பட்ட திருடன்தான் அது என்று தெரிந்தது. உடனே, தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தர, அவர்கள் விரைந்து வந்து அந்த நபரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த நபரிடம் போலீசார் விசாரித்தபோது, பெயர் சக்திவேல் என்பதும், நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. ஆள்கள் துரத்தியபோது கிணற்றுக்குள் விழுந்துவிட்டதாகத் தெரிவித்தார். சிகிச்சை முடிந்தபின் அந்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Read Entire Article