திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை

1 month ago 9

திருச்செந்தூர்,

தமிழ்நாட்டில் மிகவும் புகழ் பெற்ற திருக்கோவில்களில் ஒன்று திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில். முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இந்த சூழலில் திருச்செந்தூர் கோவிலுக்கு வந்து செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிமாகி வருகிறது.

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் அதிக பக்தர்கள் வந்து செல்லும் இடமாக திருச்செந்தூர் இருக்கிறது. இதன் காரணமாக திருச்செந்தூர் வரும் பக்தர்களுக்கு தேவையான வசதிகளை அதிகப்படுத்த பல்வறு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கோவிலிலும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் இன்று (மார்ச் 30ந் தேதி ) சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் பொது தரிசனம், 100 ரூபாய் கட்டண தரிசனம், முதியோர்களுக்கான தரிசனம் வழக்கம்போல் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல வரும் செவ்வாய் மற்றும் வியாழக்கிழமையும் சிறப்பு தரிசனத்திற்கு அனுமதி இல்லை என்று கூறப்பட்டுள்ளது. கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக கோவில் நிர்வாகம் இந்த ஏற்பாட்டை செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article