திருச்செந்தூர்: தக்காளி சட்னியில் பல்லி... 8 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்

1 week ago 5

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் மணப்பாடு மீனவ கிராமத்தில் மாணவர்கள் தங்கும் விடுதி ஒன்று இயங்கி வந்தது. அங்கு பல மாணவர்கள் தங்கி இருந்து படித்து வந்தனர்.

இந்நிலையில் அங்கு கொடுக்கபட்ட தோசை மற்றும் தக்காளி சட்னியை மாணவர்கள் சாப்பிட்டனர். சாப்பிட்ட பின்னர் அங்கிருந்த மாணவர்கள் அனைவருக்கும் வாந்தி மயக்கம் என உடல்நலக்குறைவு ஏற்பட்டன.

இதனால் அவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களை சோதனை செய்த போது சாப்பிட்ட உணவில் தான் மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதையடுத்து மாணவர்கள் சாப்பிட்ட தக்காளி சட்னியில் பல்லி விழுந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் பாதிக்கப்பட்ட 8 மாணவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து குலசேகர பட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article