
இது தொடர்பாக கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
கோடை விடுமுறையை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வாரத்தில் 3 நாட்களுக்கு சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
வாரத்தில் ஞாயிறு, செவ்வாய், வியாழக் கிழமைகளில் திருச்செந்தூர் கோவிலில் சிறப்பு தரிசனம் கிடையாது எனவும், கோடையில் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருப்பதை தவிர்க்க, சிறப்பு தரிசனத்தை ரத்து செய்துள்ளதாக திருச்செந்தூர் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.