கவர்னர் ஆர்.என்.ரவிக்கு அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து

19 hours ago 2

சென்னை,

தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இன்று தனது 72வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இந்த நிலையில், கவர்னர் ஆர் என் ரவிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் ,

இன்று பிறந்த நாள் கொண்டாடும் கவர்னர் ஆர்.என்.ரவி அவர்களுக்கு, தமிழக பாஜக சார்பாக  வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் மீதும், தமிழக மக்கள் மீதும் மிகுந்த பற்று கொண்டவர். தமிழகத்தின் முன்னேற்றத்துக்காகவும், கல்விச் சீர்திருத்தங்களுக்காகவும் அயராது உழைப்பவர்.

 தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி அவர்கள், நல்ல உடல்நலத்துடன், நீண்ட ஆயுளுடன், தமது மக்கள் பணிகள் தொடர வேண்டுமென்று இறைவனை வேண்டிக் கொள்கிறேன்.என தெரிவித்துள்ளார் . 

Read Entire Article