திருச்செந்தூர் கோயில் யானை தாக்கி பாகன் உள்பட 2 பேர் உயிரிழப்பு: பக்தர்கள் அதிர்ச்சி

3 months ago 18

தூத்துக்குடி: திருச்செந்தூர் கோயில் யானை தாக்கியதில் பாகன் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் பக்தர்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாவது படை வீடான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், விழா நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்களும் வந்து செல்கின்றனர். இக்கோயிலில் தெய்வானை (26) என்ற யானை வளர்க்கப்பட்டு வருகிறது. தெய்வானை யானை கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு தினமும் ஆசி வழங்குவது வழக்கம். திருச்செந்தூர் வஉசி நகரைச் சேர்ந்த சதாசிவம் மகன் உதயகுமார் (45) என்பவர் தெய்வானை யானையின் உதவி பாகனாக இருந்தார்.

Read Entire Article