திருச்செந்தூரில் பக்தர்களை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பி.கே.சேகர்பாபு பேசியதாக சமூக வலைதளங்களில் வீடியோ பரவி வருகிறது.
திருச்செந்தூர் கோயில் கடற்கரைப் பகுதி கடும் கடல் அரிப்பை சந்தித்து வருகிறது. கோயில் முகப்பில் பக்தர்கள் நீராடும் பகுதியில் கடல் அரிப்பு ஏற்பட்டு, 7 அடி அளவுக்கு பெரிய பள்ளம் உருவாகியுள்ளது. இந்தப் பகுதியில் பக்தர்கள் நீராட தடை விதிக்கப்பட்டுள்ளது.