டெல்லி: திருச்செந்தூர் குடமுழுக்கு நேர விவகாரத்தில் தலையிடுவது சரியாக இருக்காது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகம் 15 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூலை 7ம் தேதி நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கும்பாபிஷேகத்தை நடத்த கோயில் நிர்வாகம், அறநிலையத்துறை முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், கும்பாபிஷேக நேரத்தை நண்பகல் முகூர்த்தமான 12:05 மணி முதல் 12:45 மணி வரை மாற்ற வேண்டும் என்று உத்தரவிடக் கோரி சிவராம சுப்ரமணிய சாஸ்திரி என்பவர் உச்ச நீதிமன்றதில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார்.
இந்த மனு இன்று நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா, அகஸ்டின் ஜார்ஜ் அமர்வு ஆகியோர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது; திருச்செந்தூர் குடமுழுக்கு நேர விவகாரத்தில் தலையிடுவது சரியாக இருக்காது. குடமுழுக்கு நேரம் குறிக்கும் விவகாரத்தில் தலையிட நாங்கள் நிபுணர்கள் அல்ல. திருச்செந்தூர் குடமுழுக்கு ஜூலை 7ல் நடைபெறவுள்ளதால் தற்போது தலையிட முடியாது. வருங்காலத்தில் உரிய நிபுணர்கள் மூலம் நேரம் குறிக்க உத்தரவிடலாம். மனுதாரர் கொடுத்த 3 நேரத்தில் ஒன்றைதான் ஐகோர்ட் அமைத்த நிபுணர்குழு இறுதி செய்துள்ளது. திருச்செந்தூரில் அறநிலையத்துறை முடிவுபடியே குடமுழுக்கை காலை 6 மணிக்கு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
The post திருச்செந்தூர் குடமுழுக்கு நேர விவகாரத்தில் தலையிடுவது சரியாக இருக்காது: உச்சநீதிமன்றம் appeared first on Dinakaran.