திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பினை தடுத்திட நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் வல்லுநர்களின் ஆய்வு கூட்டம்!!

2 weeks ago 3

சென்னை : தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு.அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மதிப்பிற்குரிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி கருணாநிதி ஆகியோர் தலைமையில் இன்று (25.01.2025) இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை சீரமைத்தல் தொடர்பான வல்லுநர்களின் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடற்கரை பகுதியில் கடந்த சில நாட்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு பக்தர்கள் கடலில் நீராடுவதில் சிரமம் ஏற்பட்டது. இதனையடுத்து கடந்த 18.01.2025 அன்று மீன்வளம் – மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு. அனிதா ஆர். ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பி.கே.சேகர்பாபு, மதிப்பிற்குரிய தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி கனிமொழி ஆகியோர் துறை சார்ந்த வல்லுநர்களுடன் திருச்செந்தூருக்கு நேரில் சென்று கடற்கரை பகுதியில் கடல் அரிப்பினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து, திருச்செந்தூரில் கடல் அரிப்பை தடுத்திடும் வகையில் நிரந்தர தீர்வு காண மாநில மற்றும் ஒன்றிய அரசின் துறை சார்ந்த பேராசிரியர்கள், அறிவியலாளர்கள் மற்றும் பொறியாளர்களின் கருத்துரு பெறப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று சென்னை, நுங்கம்பாக்கம், ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் காணொலிக் காட்சி வாயிலாக இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தின் ஓய்வுபெற்ற பேராசிரியர் திரு.சுந்தர வடிவேல் அவர்களும், சென்னை இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (IIT, Madras), கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையம் (NCCR), தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனம்(NIOT), தமிழ்நாடு மீன்வளத்துறை (TN Fisheries Dept.) மற்றும் நபார்டு (NABARD) ஆகியவற்றை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் வல்லுநர்கள் பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினர்.

இக்கூட்டத்தில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் பி.சந்தரமோகன், இ.ஆ.ப., ஆணையர் திரு.பி.என்.ஸ்ரீதர், இ.ஆ.ப., கூடுதல் ஆணையர் டாக்டர் இரா.சுகுமார், இ.ஆ.ப., சென்னை இந்திய தொழில்நுட்ப கழகத்தின் பெருங்கடல் பொறியியல் துறை பேராசிரியர் திரு.எஸ்.ஏ.சன்னாசிராஜ், கடலோர ஆராய்ச்சிக்கான தேசிய மையத்தின் இயக்குநரும், அறிவியலாளருமான டாக்டர் எம்.வி.இராமமூர்த்தி மற்றும் அறிவியலாளர் டாக்டர் வி.இராமநாதன், தேசிய கடல்சார் தொழில்நுட்ப நிறுவனத்தின் குழுத் தலைவர் மற்றும் அறிவியலாளர் டாக்டர் விஜயா ரவிச்சந்திரன், நபார்டு நிறுவனத்தின் பொறியியல் ஆலோசகர் திரு. ஷெல்வின் சௌந்தரராஜன், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் மீன்வளத்துறை உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

The post திருச்செந்தூர் கடற்கரையில் கடல் அரிப்பினை தடுத்திட நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில் வல்லுநர்களின் ஆய்வு கூட்டம்!! appeared first on Dinakaran.

Read Entire Article