திருச்செந்தூர் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய டால்பின்

1 week ago 3

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் ஜீவாநகர்- வீரபாண்டியன்பட்டினம் இடையே உள்ள ஜெ.ெஜ.நகர் கடற்கரை பகுதியில் நேற்று காலையில் சுமார் 4½ அடி நீளமுள்ள டால்பின் இறந்து கரை ஒதுங்கி கிடந்தது. அதன் தலையில் காயம் இருந்தது.

இதுகுறித்து அப்பகுதி மீனவர்கள், மீன்வளத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே மீன்வளத்துறையினர், வனத்துறையினர் விரைந்து சென்று, இறந்த டால்பினை பார்வையிட்டனர். இறந்தது சுமார் 2 வயதான ஆண் டால்பின் என்றும், அது கப்பல் அல்லது பாறையில் மோதியதில் காயம் ஏற்பட்டு இறந்து கரை ஒதுங்கி இருக்கலாம் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொடர்ந்து கால்நடை மருத்துவ குழுவினர் டால்பினை பிரேத பரிசோதனை செய்து, கடற்கரை பகுதியில் புதைத்தனர்.

Read Entire Article