திருச்செந்தூரில் பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி பக்தர்கள் செல்பி: 50 அடிக்கு கடல் உள் வாங்கியதால் பரபரப்பு

2 weeks ago 5

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் 50 அடிக்கு கடல் உள் வாங்கியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முருகனின் ஆறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக திருச்செந்தூர் சுப்ரமணிய சாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள் தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவர். அதை தவிர விடுமுறை தினங்களில், திருவிழா நாட்களில் பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

திருச்செந்தூர் கடற்கரை முன்பு அமாவாசை, பவுர்ணமி தினங்களில் கடல் உள்வாங்கி காணப்படுவது வழக்கம் ஆனால் வருகின்ற 1 ஆம் தேதி தான் அம்மாவாசை வர உள்ளது. இந்த நிலையில் 3 தினங்களுக்கு முன்பாகவே இன்றைய தினம் திருச்செந்தூர் கடலானது உள்வாங்கி காணப்படுகிறது. சுமார் 50 அடி வரை உள்வாங்கி காணப்படுகிறது. இதனால் கடற்கரை 4 கிணறு பகுதியிலிருந்து ஐயா கோவில் வரையிலும் கடல் உள்வாங்கி காணப்படுகிறது.

திருச்செந்தூர் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கடல் உள்வாங்கியது தெரியாமல் பாசிபிடித்த பாறையில் ஏறி எந்தவித அச்சமும் இன்றி செல்பி எடுத்து வருகின்றனர். கடல் உள்வாங்கியதால் பல்வேறு சிலைகள் வெளியே தெரிகின்றன. வருகின்றன நவம்பர் 2 ஆம் தேதி கந்தசஷ்டி விழா தொடங்க உள்ள நிலையில் பல லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு வருவர். அதன்படி வரும் மக்கள் கடலில் நீராடும் போது கல் சிலைகள் தட்டி விபத்து ஏற்பட அபாயம் உள்ளது. எனவே கந்தசஷ்டி திருவிழாவிற்கு முன்பே சிலைகள் அனைத்தையும் அப்புறப்படுத்த வேண்டும் என பொதுமக்கள், பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

The post திருச்செந்தூரில் பாசி படிந்த பாறைகள் மேல் ஏறி பக்தர்கள் செல்பி: 50 அடிக்கு கடல் உள் வாங்கியதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Read Entire Article