திருச்செந்தூரில் ஒரே நாளில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் - அலைமோதிய கூட்டம்

1 week ago 2

தூத்துக்குடி,

திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். குறிப்பாக முகூர்த்த நாட்களில் திருச்செந்தூர் முருகன் கோவிலில் கூட்டம் அதிகரித்து காணப்படுவதோடு, கோவில் வளாகத்தில் திருமண நிகழ்வுகளும் நடைபெறுகின்றன.

அந்த வகையில் இன்றைய தினம், தை மாதத்தின் கடைசி முகூர்த்த தினம் என்பதால் திருச்செந்தூரில் 100-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றன. பக்தர்கள் மற்றும் மணமக்களை வாழ்த்த வந்த உறவினர்கள் ஆகியோர் அதிக அளவில் வருகை தந்ததால் திருச்செந்தூரில் இன்று மக்கள் கூட்டம் அலைமோதியது. கடலில் புனித நீராடி, நாழிக் கிணற்றில் குளித்து விட்டு நீண்ட வரிசைகளில் காத்திருந்து பக்தர்கள் மனமுருக சாமி தரிசனம் செய்தனர்.

Read Entire Article