மதுரை: திருச்செந்தூரில் அனைத்து தெருக்களையும் அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி, பெயர் பலகை வைக்கக்கோரி திருச்செந்தூரைச் சேர்ந்த சுரேஷ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில், தெருவின் நீள, அகல விவரங்களுடன் பெயர் பலகை வைக்க உத்தரவிடக் கோரி தெரிவிக்கப்பட்டு இருந்தது. இந்த வழக்கின் விசாரணையில், தெருக்களை அளந்து, பெயர் பலகை வைக்கும் பணி நடைபெற்று வருகிறது என தமிழ்நாடு அரசு தரப்பி தெரிவிக்கப்பட்டுள்ளது. தெருக்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி பெயர் பலகை வைக்கும் பணியை 12 வாரத்தில் முடிக்க ஐகோர்ட் கிளை உத்தரவிட்டு பொதுநல வழக்கை முடித்துவைத்தது.
The post திருச்செந்தூரில் ஆக்கிரமிப்பை அகற்றக்கோரி வழக்கு: ஐகோர்ட் கிளை உத்தரவு appeared first on Dinakaran.