திருவனந்தபுரம்: கேரள மாநிலம் திருச்சூரில் ஏராளமான நகை தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளன. கடந்த பல வருடங்களாக இந்த நிறுவனங்கள் வரி ஏய்ப்பு செய்து வருவதாக ஜிஎஸ்டி துறையினருக்கு தகவல் கிடைத்தது. மேலும் கடத்தல் தங்கத்தையும் இவர்கள் பயன்படுத்தி வந்துள்ளனர். இதையடுத்து ஜிஎஸ்டி துறையின் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு ஆணையர் ஆபிரகாம் தலைமையில் நேற்று முன்தினம் மாலை திருச்சூர் முழுவதும் நகை தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் கடைகளில் திடீர் சோதனை நடத்தினர்.
ஜிஎஸ்டி புலனாய்வு பிரிவை சேர்ந்த 700 அதிகாரிகள் இந்த அதிரடி சோதனையில் பங்கேற்றனர். ஒரே சமயத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்களில் இந்த சோதனை நடைபெற்றது. இதில் 120 கிலோவுக்கும் மேல் பதுக்கி வைக்கப்பட்ட தங்கம் கைப்பற்றப்பட்டது. எந்த ஆவணமும் இல்லாமல் இந்த தங்கத்தை பதுக்கி வைத்திருந்தனர். இந்த சோதனை நேற்று இரவு வரை 24 மணி நேரத்திற்கும் மேல் நீடித்தது.
The post திருச்சூரில் நகை தயாரிப்பு நிறுவனங்களில் 120 கிலோ தங்கம் பறிமுதல்: ஜிஎஸ்டி அதிகாரிகள் அதிரடி appeared first on Dinakaran.