திருச்சி முதல் நாமக்கல் வரை புறவழிச்சாலை அமைக்க மண் பரிசோதனை: நெடுஞ்சாலைத்துறை தீவிரம்

4 weeks ago 6


முசிறி: திருச்சி முதல் நாமக்கல் வரை புறவழிச்சாலை அமைக்கும் பணி துவங்கியது. முசிறி நகர பகுதியில் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள், மாணவ-மாணவிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருவதால் தமிழக அரசு அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு முசிறி பகுதியில் போக்குவரத்து நெரிசலை சீர் செய்யும் பொருட்டு அப்பகுதியில் புதிய புறவழிச்சாலை அமைக்கும் பணிக்கு தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நெடுஞ்சாலைத் துறையின் மூலம் திருச்சி முதல் நாமக்கல் வரை செல்லும் சாலையில் உமையாள்புரம் பகுதியில் ஆரம்பித்து முசிறி முதல் தண்டலைப்புத்தூர் செல்லும் சாலை, முசிறி முதல் துறையூர் செல்லும் வரை, முசிறி முதல் தா.பேட்டை வரை செல்லும் ஆகிய மூன்று சாலைகளை இணைத்து, உமையாள்புரம், செவந்தலிங்கபுரம், முசிறி கிழக்கு, எம்.புதுப்பட்டி கிழக்கு, எம்.புதுப்பட்டி மேற்கு கிராமப்பகுதிகள் வழியாக முசிறி நகரப்பகுதி தாண்டி கொக்கு வெட்டியான் கோவில் அருகில் முடியும்படியான புறவழிச்சாலை அமைப்பு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

இந்நிலையில் நிள அளவீடு பணிகள் முடிக்கப்பட்டு தற்சமயம் 8 பாலங்கள் கட்டப்பட உள்ள இடங்களில் மண்பரிசோதனை செய்யும் பணியானது நடைபெற்று வருகிறது. இப்பணியானது திருச்சி மாவட்ட நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்புப் பொறியாளர் செந்தில் மற்றும் கோட்டப் பொறியாளர் கண்ணன் ஆகியோரின் அறிவுறுத்தலின்படி உதவிக் கோட்டப் பொறியாளர் பிரபாகர் மேற்பார்வையில் மற்றும் உதவிப் பொறியாளர்கள், லியோபிரதாப் மற்றும் லோகநாயகி ஆகியோர்கள் பார்வையிட பணி நடைபெற்று வருகிறது.

The post திருச்சி முதல் நாமக்கல் வரை புறவழிச்சாலை அமைக்க மண் பரிசோதனை: நெடுஞ்சாலைத்துறை தீவிரம் appeared first on Dinakaran.

Read Entire Article