திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து 7ல் ஊர்வலம்

4 months ago 9

 

ஜெயங்கொண்டம், ஜன.5: திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து 7ல் ஊர்வலம் நடத்தி கலெக்டரிடம் மனு கொடுப்பது என்று ஜெயங்கொண்டத்தில் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் கூறினார். ஜெயங்கொண்டத்தில் தமிழ்நாடு கூட்டுறவு சங்கத்தின் சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,திருச்சி மாவட்டம் அமராவதி கூட்டுறவு சொசைட்டியில் வைப்பு நிதியில் உள்ள முறைகேடுகளை சுட்டிக் காட்டக்கூடிய பணியாளர்களுக்கு கொலை மிரட்டல் விடுவதும், அங்கு பணியாற்றக்கூடிய பணியாளரின் குடும்பத்தினர் மீது கஞ்சா பொய் வழக்கு போட்டு திருச்சி மாவட்ட கூட்டுறவுத்துறை பயமுறுத்துகிறது.

இதைக் கண்டித்து பலமுறை போராட்டம் நடத்தியும் தமிழக அரசு கண்டு கொள்ளவில்லை. அதே போன்று ரேஷன் கடை செயல்படும் கட்டிடத்திற்கு பணியாளர்கள் வாடகை தர வேண்டும் என நிர்பந்திக்கப்படுகிறார்கள்.இப்படி பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்றாத திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையை கண்டித்து வரும் 7-ம் தேதி தமிழ்நாடு நியாயவிலைக் கடை கூட்டுறவு சங்கங்கள் மற்றும் பல்வேறு சங்கங்கள் ஒன்றிணைந்து கருப்பு சட்டை அணிந்து ஊர்வலமாக சென்று திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கும் போராட்டம் நடத்த உள்ளோம். இதற்கு நிரந்தர தீர்வு காணாத பட்சத்தில் அடுத்த கட்டமாக மாநில சங்கங்களை அனைத்தும் இணைத்து மிகப் பெரிய அளவில் கவனயீர்ப்பு போராட்டம் தமிழக அரசை கண்டித்து நடத்த உள்ளோம் என்றார்.

The post திருச்சி மாவட்ட கூட்டுறவு துறையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து 7ல் ஊர்வலம் appeared first on Dinakaran.

Read Entire Article